பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குநர் அகத்தியனின் மனைவி ராதா, மாரடைப்பால்(68) இன்று(அக்.,21-ம் தேதி) காலமானார். வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற பல படங்களை இயக்கியவர் அகத்தியன். இவற்றில் அஜித் நடித்த காதல் கோட்டை படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். இவரது மனைவி ராதா. இவர் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். ராதாவின் உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
அகத்தியன்-ராதா தம்பதியருக்கு கார்த்திகா, விஜயலெட்சுமி, நிரஞ்சனி என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் திரு, இவர்களது மருமகன் ஆவார்.