'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பல படங்களில் நடித்தும் க்ளிக் ஆகாதததினால் எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை தானே தயாரித்தார் விஷ்ணு விஷால். அவர் தயாரிப்பாளராக களமிறங்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது 'வி.வி.புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ஒரு படத்தை துவங்கியுள்ளார் விஷ்ணுவிஷால்.
அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தின் பூஜை சென்ற மாதம் நடந்தது.
இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு 'முண்டாசுப்பட்டி' படத்திற்கு இசை அமைத்த ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். 'முண்டாசுப்பட்டி'யில் விஷ்ணுவிஷால் உடன் இணைந்து நடித்த ஆனந்தராஜும் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரட்கரில் நடிக்கிறார். இந்த தகவலை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'மாவீரன் கிட்டு' படத்தின் டப்பிங்கிலும் பிசியாக உள்ளார் விஷ்ணு விஷால். இந்தப்படம் விரைவில் வெளியாகிறது.