மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினியை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு. அந்த படத்தில் இரண்டாம் பாகமாக இப்போது சிவலிங்கா படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து சிவலிங்கா படத்தை இயக்கிய அவர், அதே பெயரில் தமிழில் இப்போது ராகவா லாரன்சை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், வடிவேலு, ஊர்வசி உள்பட பலர் இப் படத்தில் நடிக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதே நாளில் விஜய் நடித்து வரும் பைரவா படமும் திரைக்கு வருகிறது. என்றாலும், விஜய் படத்தில் இருந்து மாறுபட்ட கதையில் சிவலிங்கா உருவாகியிருப்பதால் வசூல்ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்று தைரியமாக களமிறங்கி விடுகிறார்களாம். அதோடு, விஜய் நடித்து வரும் பைரவா டைட்டீல் ராகவா லாரன்ஸ்க்கு சொந்தமானது. விஜய் கேட்டுக்கொண்டதால் அந்த டைட்டீலை விட் டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.