ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.பாலசந்தர் இயக்கிய தில்லுமுல்லு படத்தில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். அதையடுத்து பல படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் முழுநேர சின்னத்திரை நடிகையாகி விட்டார். அவரை தான் இயக்கிய ஆரோகனம் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பின் னர், நெருங்கி வா முத்தமிடாதே, நய்யப்புடை, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது கெளதம் கார்த்திக் நடித்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.
அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதலில் சுகன்யாதான் கெளதம் கார்த்தியின் அம்மாவாக நடிக்கயிருந்தார். ஆனால், படப்பிடிப்பு நடைபெற்றபோது அமெரிக்காவில் ஒரு நடன நிகழ்ச்சியில் சுகன்யா கலந்து கொள்ளவேண்டியிருந்ததால் அவருக்குப்பதிலாக விஜி சந்திரசேகர் நடித் தார். செண்டிமென்ட்டான காட்சிகள் நிறைந்த கதாபாத்திரம் என்பதால், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின்போது கிளிசரின் போடாமலேயே அழுது நடித்து யூனிட்டை கண்கலங்க வைத்து விட்டாராம் விஜி சந்திரசேகர். அந்த வகையில், ஆரோகனம் படத்திற்கு பிறகு அவருக்கு முத்துராமலிங்கம் இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.