அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தமிழ் இயக்குனரான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய படம் லென்ஸ். சமூக வலைத்தளங்கள் மூலமாக நடக்கும் குற்றங்கள் பற்றிய படம். ஏற்கெனவே பல சர்வதேச விருதுகளை பெற்ற படம். படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
7வது ஜாக்ரன் திரைப்பட விழா மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன. இந்த விழாவின் போட்டிப் பிரிவில் மாரிகொண்டவரு, வெய்ட்டிங், இறுதிச் சுற்று, பஹாதா ரா லுஹா, வைசாகி லிஸ்ட், சர்ப்ஜித், சோலை, தல்வார், ஏர்லிப்ட், மோர் மண் கி பாரம், நில் பட்டே சன்னாட்டா, பல்லா@ஹல்லா.காம், மிதிலா மகான், சதுரம், அர்ஷிநகர், நட்சாம்ராட் மற்றும் நீரஜா போன்ற படங்கள் பங்கேற்றன.
இந்தியாவின் பிரபலமான படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய லென்ஸ், ஹன்ஸ்லால் மேத்தாவின் அலிகர், அபர்ணா சென்னின் அர்ஷிநகர், மேக்னா குல்ஸாரின் தல்வார், கேடி சத்யம் இயக்கிய பாலிவுட் டைரிஸ், பவுத்தாயன் முகர்ஜியின் தி வயலின் ப்ளேயர் போன்றவை திரையிடப்பட்டன. இவற்றில் லென்ஸ் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ள லென்ஸ், விரைவில் உலகளவில் வெளியாக உள்ளது.