பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தான் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்றும் சொன்னார். அவரைத் தொடர்ந்து இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்துவும் ரஜினியை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று இந்தியா திரும்பியபோது அவருக்கு ஏராளமான இந்திய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். ரஜினியின் பாராட்டில் உருகிப்போன சிந்து, தான் அளித்த ஒரு பேட்டியில் ரஜினியை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆக, இதுவரை சினிமா ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வந்த ரஜினி, இப்போது விளையாட்டு வீராங்கனை களையும் கவர்ந்து வருகிறார்.