ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த சிபிராஜுக்கு முதன்முறையாக 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் வெற்றி கிடைத்தது. அதைத்தொடர்ந்து நடித்த போக்கிரி ராஜா சூப்பர் ப்ளாப் ஆனது. அடுத்து நடித்த, 'ஜாக்சன் துரை' ஓரளவு வசூலித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'கட்டப்பாவை காணோம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே சிபிராஜ் தனது அடுத்த படத்தில் நடிக்கவிருப்பது பற்றி அறிவிப்பு செய்துள்ளார். 'கட்டப்பாவை காணோம்' படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிபி ராஜ். இவர் யார் தெரியுமா, விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 'சைத்தான்' படத்தை இயக்கியவர் இவர்தான். சிபிராஜிடம் இவரைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது இவர்தான். இப்படத்தின் தலைப்புடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.