ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரத்தின சிவா இயக்கத்தில் டி. இமான் இசையமைப்பில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'றெக்க' படத்தின் பாடல்கள் 25ம் தேதியன்று வெளியானது. கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய மெலடி பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இசையமைப்பாளராக இமான் இருந்து வருகிறார். 'றெக்க' படத்தில் இமான் இசையமைப்பில் யுகபாரதி எழுதி ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள 'கண்ண காட்டு போதும்...நிழலாகக் கூட வாரேன்.., என்ன வேணும் கேளு, கொறையாம நானும் தாரேன்..' பாடல் உடனடி ஹிட்டாகியுள்ளது.
இமான் - யுகபாரதி - ஸ்ரேயா கோஷல் கூட்டணியில் வந்த பல பாடல்கள் இதற்கு முன் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்த 'றெக்க' பாடலும் இடம் பிடித்துள்ளது. இந்தப் பாடலை யு டியூபில் இரண்டு நாட்களுக்குள்ளாகவே 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரசித்துள்ளனர். தான் இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலையாவது சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்த்து வருகிறார் இமான். 'றெக்க' படத்தில் இந்தப் பாடல் அந்த வரிசையில் இடம் பிடித்துவிடும் என இப்போதே சொல்லிவிடலாம். இப்படம் அக்டோபர் 7ம் தேதியன்று வெளியாக உள்ளது.