பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் நடித்த மாதவன், அந்தப்படத்தின் தோல்விக்குப்பிறகு தமிழில் நடிப்பதை விரும்பாமல் இருந்தார். மணிரத்னத்தின் உதவியாளரான சுதா கொங்கணா சொன்ன கதை பிடித்துப்போய் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் மாதவன். மாதவனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் என்ற நிஜமான குத்துச்சண்டை வீராங்கனை நடிக்க தமிழில் 'இறுதிசுற்று' என்ற பெயரிலும், ஹிந்தியில் சாலா கடூஸ் என்ற பெயரிலும் வெளியானது. தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்து நல்ல வசூலை அறுவடை செய்தது.
இந்நிலையில் இப்படம் ஜப்பானில் நடைபெறவிருக்கும் 29ஆவது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஜப்பானில் இந்த விழா வருகிற அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்காக மாதவன், ரித்திகா சிங், இயக்குநர் சுதா, யுடிவியின் முன்னாள் நிர்வாகி தனன்ஜெயன் ஆகியோரை உள்ளடக்கிய இறுதிச்சுற்று படக்குழுவினர் ஜப்பான் செல்ல இருக்கிறார்கள்.