ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உடல் நலம் தேறியுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி முதல் பக்கத்து மாநில முதல்வர்கள் வரை அரசியல் தலைவர்களும், கருணாநிதி உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், ரஜினி, விஷால் உள்ளிட்ட திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் கமலும் முதல்வர் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
கமல் தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைய வாழ்த்துவதாக'' கூறியுள்ளார்.