ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. வழக்கமான கமர்ஷியல் மசாலாப் படமாக இருந்தாலும் உருவாக்கத்தில் படம் பிரமாதமாக இருந்ததால் ரசிகர்களைப் படம் கவர்ந்தது. அதனால் கமர்ஷியல் ரீதியாகவும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியான முதல் சில நாட்களிலேயே 60 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலித்து, தற்போது படம் 100 கோடி வசூலைத் தொட உள்ளதாக தயாரிப்பு வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'இருமுகன்' படத்திற்குப் போட்டியாக எந்தப் படமும் இல்லை அதனால்தான் அந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் பேச்சுக்கள் எழுந்தது.
ஆனால், இரண்டு வாரங்களை முழுதாகக் கடந்த பின்னும் பல தியேட்டர்களில் படம் இன்றும் நாளையும் கூட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை', நேற்று முன்தினம் தனுஷ் நடித்துள்ள 'தொடரி' படம் வெளிவந்தும் அந்தப் புதுப் படங்களையும் சமாளித்து 'இருமுகன்' முன்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் உண்மையான வசூல் படங்களில் 'இருமுகன்' இடம் பிடித்துள்ளது என்றே வினியோக வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். இன்றைய தேதியில் இரண்டு வாரங்களை வெற்றிகரமாகக் கடக்கும் படங்கள் வெற்றிப் படங்களே. அது 'இருமுகன்' விஷயத்தில் உண்மையாகிவிட்டது.