மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர்கள் வரிசையாக வெளியில் வந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் விஜய் பாலாஜி. அவர் இயக்கும் படத்தின் பெயர் விதி மதி உல்டா. டார்லிங் 2 படத்தில் ஹீரோவாக நடித்த ரமீஸ்ராஜா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். அஸ்வின் இசை அமைத்துள்ளார்.
"நாம் கனவில் காணும் நிகழ்வுகளும் சம்பவங்களும் மறுநாள் நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். நல்ல கனவு ஓகே அனுபவிக்கலாம். அதுவே கெட்டகனவாக இருந்தால்... என்ன ஆகும் என்பதை ஜாலியாக சொல்லும் படம். விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று உறுதியாக சொல்கிற படம். ஹீரோயின் ஜனனி அய்யருக்கு அவரது கண் ரொம்பவே ஸ்பெஷல் அதை மையமாக வைத்து பாடலாசியர் கபிலன் "தாறுமாறான ஒரு பார்வை பார்க்க... நேர்மாறா என்ன அடிச்சு தூக்க..." என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை நட்புக்காக ஜி.வி.பிரகாஷ் பாடிக் கொடுத்துள்ளார். இந்த பாடல் பேசப்படுவதாக இருக்கும்" என்கிறார். இயக்குனர் விஜய் பாலாஜி.