தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் - குற்றமே தண்டனை. இந்த திரைப்படத்தில் சுவாதி கொலை தொடர்பான முக்கியமான சம்பவங்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. குற்றமே தண்டனை படத்தில், சுவாதியைப் போலவே நடு ரோட்டில் கொலை செய்யப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த கொலைக்காட்சி மட்டுமல்ல, வேறு சில அம்சங்களும் சுவாதி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவங்களுடன் ஒத்துப்போயிருப்பதாக சொல்கிறார்கள். சுவாதி கொலையில் போலீஸ் துப்புதுலக்கியபோது அவர்களுக்கு கிடைத்த முதல் ஆதாரம்... நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ராம்குமார் வெளியேறும் சிசி டிவி காட்சிதான். அந்த காட்சியில் கருப்பு பேண்ட், கட்டம்போட்ட சட்டை அணிந்திருக்கும் ராம்குமார் தோளில் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு வேகமாக நடந்து செல்வார்.
குற்றமே தண்டனை படத்தில் இதே கெட்டப்பில் விதார்த்தும் ஒரு காட்சியில் தோன்றி இருக்கிறார். அதுமட்டுமல்ல, இன்னொரு ஒற்றுமையுடம் உண்டு. சுவாதி கொலை சம்பவத்தில் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டவரின் பெயர் ராம்குமார். குற்றமே தண்டனை படத்தில் விதார்த்தின் கதாபாத்திரத்தின் பெயர் முத்துக்குமார். சுவாதி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட குற்றமே தண்டனை படத்தில் இத்தனை ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.