'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்த படம் குற்றமே தண்டனை. இன்னும் சொல்லப்போனால் காக்கா முட்டைக்கு முன்னமே தொடங்கப்பட்ட படம். நடிகர் விதார்த் குறும்பட இயக்குனராக இருந்த மணிகண்டனை பெரும்பட இயக்குனராக்கிய படம். சில காரணங்களால் சற்று கால தாமத்துடன் இன்று வெளியாகியுள்ளது. இதில் விதார்த்துடன் பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுமான், நாசர், குரு சோமசுந்தரம் நடித்துள்ளனர், மணிகண்டனே ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தை பற்றி விதார்த் கூறியதாவது: "ஒரு சினிமா தயாரிக்கிற அளவிற்கு நான் வசதியானவன் அல்ல. ஆனால் குற்றமே தண்டனை கதையை கேட்டபிறகு கடன் வாங்கியாவது இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மைனா படத்திற்கு பிறகு என் மனசுக்கு நெருக்கமான படம். மைனா வெற்றியை இன்னொரு படத்தில் நான் பெறவில்லை. இந்தப் படம் அந்த வெற்றியை பெற்றுத் தரும். குற்றமே தண்டனை தயாரித்ததில் எனக்கு பெருமை.
இதில் என்னோடு என் மனசாட்சியையும் நடிக்க வைத்திருக்கிறார் மணிகண்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் செய்யும் தவறுகளுக்கு அவனது மனசாட்சிதான் முதல் தண்டனை கொடுக்கும். அப்படி ஒரு புதிய விஷயத்தை இந்தப் படம் பேசும். பலருடைய மனசாட்சியை தட்டி எழுப்பும். என்கிறார் விதார்த்.