ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் தயாரித்து நடித்துள்ள படம் குற்றமே தண்டனை. இந்த படத்திற்கு முதலில் குற்றமும் தண்டனையும் என்று தான் பெயர் வைத்திருந்தனர். பின்னர் அதை மாற்றினர். மேலும், காக்கா முட்டை படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் மணிகண்டன். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை படத்தையும் முடித்து விட்டு இப்போது கடைசி விவசாயி படவேலைகளை தொடங்கி விட்டார். ஆனால் இப்போதுதான் குற்றமே தண்டனை ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் நீளம் 99 நிமிடங்கள்தானாம். சமீபத்தில் வெளியான விசாரணை, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்கள் 100 நிமிடங்களுக்கு மேல் இருந்த நிலையில், இந்த படம் அந்த படங்களை விடவும் குறைவான நேரமே ஓடக்கூடியதாக இருக்கிறது. ஆனால், ஹாலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் இதே நீளத்தில்தான் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், குற்றமே தண்டனை படமும் ஹாலிவுட் படங்களை பார்த்த திருப்தியை கொடுக்கும் என்கிறார்கள்.