பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வாகா'. ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்கு விக்ரம் பிரபுவுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி. படம் வெளியாகும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்தார் விக்ரம் பிரபு.
இந்நிலையில், விக்ரம் பிரபு நடிப்பில் 'வீரசிவாஜி' என்ற படம் வெளியாகவிருக்கிறது. தற்போது 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'தகராறு' படப் புகழ் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஜித்குமாரின் மைத்துனி ஷாம்லி நடிக்கிறார். டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து 'வீரசிவாஜி'யை அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்கள். 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் வெளியிடவிருக்கிறது.