டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காஸ்மோரா படத்தில், மொட்டை தலை, ஈட்டி, கழுகுச் சின்னம், கவச உடை என, கார்த்தியின் தோற்றம், அனைவரையும் மிரள வைத்துள்ளது. போர் வீரன் தோற்றத்தில் இருப்பதால், பாகுபலி படத்தின் சாயல் இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுகிறது. அதிலும், பாகுபலியில் சத்யராஜ் நடித்த, கட்டப்பா வேடத்தைப் போலவே, கார்த்தியின் தோற்றமும் இருப்பதால், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பரபரப்பாக அலசப்படுகிறது. நவீன கேமரா, '3டி பேஸ் ஸ்கேனிங்' போன்ற தொழில்நுட்பங்களும் இதில் கையாளப்பட்டுள்ளனவாம். இந்த படத்தில், கார்த்தி, மூன்று வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்தின் ஸ்டில்கள் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுவது, படக்குழுவினருக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.