ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் 'வளையல்'. பாரதிராஜாவின் உதவியாளர் ஏ.குருசேகர் இயக்கும் இந்தப் படத்தில் சக்தி சிவன், பாவ்யாஸ்ரீ ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மனோஜ் கே.ஜெயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பி.ஆர்.மூவீ மேக்கர்ஸ் சார்பில் பி.ஆர்.காளியப்பன் தயாரிக்கிறார். ஜி.சிவா ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.முரளி சுப்ரமணி இசை அமைக்கிறார்.
“நாயகி உடல் குறைபாடு உடையவர். ஒரு விபத்தில் பேசும் திறனை இழந்தவர். நாயகனை காதலிக்கிறார். ஆனால் தனக்கு பேசும் திறன் இல்லை என்பதை மறைத்து சமாளிப்பார், இந்த காதலை காமெடியாகவும், நெகிழ்ச்சியாகவும் காட்டுகிறோம். ஒரு கட்டத்தில் காதலிக்கு பேச்சு வராது என்று தெரிய வருகிறபோது காதலன் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. இதுவரை ஏராளமான காதல் கதைகள் வந்திருக்கிறது. அவற்றிலிருந்து மாறுபட்டு புதுமையான ஒரு காதலைச் சொல்கிறோம். பேசத் தெரியாத காதலியின் சார்பில் பேசுவதெல்லாம் அவள் வளையல்தான். அதனால்தான் தலைப்பும் 'வளையல்' என்று வைத்திருக்கிறோம்.