ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக்கின் மகன் கெளதம் நாயகனாக நடித்து கடல், என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து அவர் நடித்த சிப்பாய் கிடப்பில் கிடக்கிறது. இந்திரஜித், ரங்கூன் போன்ற படங்கள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்நிலையில், ராஜதுரை இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்த முத்துராமலிங்கம் படம் வேகமாக வளர்ந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.
மேலும், இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இப்படத்தில் கெளதம்கார்த்திக், பிரியாஆனந்த் ஜோடி யுடன் பிரபு, சுகன்யா, நெப்போலியன், ராதாரவி, சுமன், சிங்கம்புலி, ரேகா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குற்றாலம், சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று இறுதிகட்ட பணிகள் நடந்துள்ள நிலையில், முத்துராமலிங்கம் படம் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெளதம் கிராமத்து நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு பரபரப்பு கூட்டவும் திட்டமிட்டுள் ளார்கள்.