பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகேஷ் பாபு நடித்த பிரம்மோற்சவம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நாயகி ரகுல் ப்ரீத்தி சிங் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் இம்முறை மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை ரகுல் தவறவிடவில்லை. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடங்களில் நடிக்கும் வாஸ்கோடகாமா படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விரைவில் ரகுல் ப்ரீத்தி சிங் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக துருவா படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். அப்படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் வாஸ்கோடகாமா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார் என ஏற்கனவே கூறப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் 11ல் ரகுல் ப்ரீத்தி சிங் வாஸ்கோடகாமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.