ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் கட்அவுட் கலாச்சாரத்தை கொண்டு வந்தது சினிமாதான். அதன் பிறகுதான் அது அரசியல் கட்சிக்குச் சென்றது. ரஜினி, கமல் காலத்தில்தான் கட்அவுட் கலாச்சாரம் பெருகி வளர்ந்தது. 1980 களில் கட்அவுட் கலாச்சாரம் நெல்லை பகுதியில் உக்கிரமாக இருந்த காலகட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் படம் 'எங்கிட்ட மோதாதே'. நட்டி நடராஜ் ரஜினி கட்அவுட் வரைபவராக நடித்துள்ளார், அவரது ஜோடியாக சஞ்சிஷா ஷெட்டி நடித்துள்ளார். கமல் கட்அவுட் வரைபவராக 'மூடர்கூடம்' ராஜாஜி நடித்துள்ளார். அவரது ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார்.
கட்அவுட் கலாச்சார பின்னணியில் நடக்கும் கமல், ரஜினி ரசிகர்கள் மோதல் அதன் பின்னணியில் உலவும் அரசியல், வாழ்க்கை என வித்தியாசமான கோணத்தில் கதை சொல்கிறார். இயக்குனர் ராமு செல்லப்பா. நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார், கணேஷ் சந்த்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஆர்.வி. பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.