சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விக்ரம் பிரபு நடித்து வரும் படம் 'வீரசிவாஜி'. ஷாம்லி ஹீரோயின். 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கிறார். கணேஷ் விநாயக் இயக்குகிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைத்துள்ளார்.
'கரகாட்டக்காரன்' படத்தில் செந்தில் “அண்ணே இந்த கார் யாருதுண்ணே?” என்பார் “இது சொப்பன சுந்தரி கார் என்பார் கவுண்டமணி, “இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்திரியை யார்னே வச்சிருந்தா” என்பார். இது புகழ்பெற்ற காமெடி. ஆனால் படத்தில் சொப்பன சுந்தரி கேரட்டர் இடம்பெறாது.
யார் அந்த சொப்பன சுந்திரி? என்ற கேள்விக் பதிலாக 'வீரசிவாஜி' படத்தில் இமான் “நான்தான் சொப்பன சுந்தரி...” என்ற பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். அதனை நேற்று ஜெயம் ரவி வெளியிட்டார். பாடலோடு பாடல் காட்சி படமான மேக்கிங் வீடியோவையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள். விஜயலட்சுமி பாடியிருக்கும் குத்துப் பாடல், தற்போது இணையத்தில் வைரலாக ஹிட் அடித்திருக்கிறது.