தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வேதிகா மலையாள திரையுலகில் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மலையாள படமான ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் படம் வேதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.. இந்தப்படத்தில் பிருத்விராஜின் மனைவியாக பள்ளி செல்லும் ஏழு வயது சிறுமிக்கு அம்மா கேரக்டரில் தைரியமாக நடித்திருந்தார். இயல்பிலேயே குழந்தைகள் மீது பிரியமாக இருக்கும் வேதிகாவுக்கு, இந்தப்படத்தில் தனது மகளாக நடித்தவரை அடிக்கடி திட்டிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார்கள்..
அதற்காக திட்டும் காட்சிகளில் திட்டாமல் நடிக்க முடியுமா என்ன..? இதற்கு வேதிகா என்ன செய்தார் தெரியுமா..? ஒவ்வொருமுறை குழந்தையை திட்டும் காட்சிகளில் நடித்துவிட்டு டேக் ஒகே ஆனதும் உடனே அந்த குழந்தையிடம் வந்து ஸாரி கேட்டுவிடுவாராம்.. அதுமட்டுமல்ல, தினசரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதே அந்த குழந்தைக்கு நிறைய சாக்லேட்டுகளும் வாங்கி வந்து கொடுப்பாராம். இதனால் வேதிகா தன்னை திட்டினாலும் கூட அவர் நல்லவர் என புரிந்துகொண்ட அந்த குட்டிப்பெண் வேதிகாவிடம் நன்றாக ஓட்டிகொண்டாராம். தற்போது திலீப்புடன் 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் வேதிகா.