பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்நாட்டைப்போல இலங்கையிலும் ஒரு காலத்தில் தமிழ் படங்கள் உருவானது. இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் சில படங்களும் உருவானது. இலங்கை தமிழ் சினிமா, அந்த நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் முடக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அங்கு 'கோமாளி கிங்ஸ்' எனும் முழு நீள நகைச்சுவை திரில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.
இலங்கையில் தமிழர் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிங் ரத்னம். இலங்கையில் பல்வேறு விளம்பரங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கியுள்ள கிங் ரத்னத்தின் முதலாவது முழு நீளத் திரைப்படமான 'கோமாளி கிங்ஸ்' இலங்கையில் வழக்கிலிருக்கும் ஐந்து தமிழ்ப் பேச்சு வழக்குகளை உள்ளடக்கியதாகவும், இலங்கை தமிழ் சினிமாவின் தனித்துவத்தைப் பிரபலிப்பதாகவும் அமைந்திருக்கின்றது.
ராஜா கணேசன், தர்சன் தர்மராஜ் மற்றும் நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேஷன் மற்றும் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சிப் பிரபலமான சத்ய ப்ரியா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கிங் ரத்னமும் முக்கியமான கேரக்டரில் நடிதுள்ளார். மையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீராம் சச்சி இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.