ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுராஜ் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'கத்திச் சண்டை' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரம் படத்தில் நடிப்பதால் இந்தப் படம் மீது பூஜை போட்ட அன்றே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப் படம் முழு நகைச்சுவைப் படமாக உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் விஷாலுக்கே உரிய ஆக்ஷனும் படத்தில் இருக்கிறது. விஷால் - தமன்னா முதன் முறையாக இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படி இந்தப் படத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.
விஷால் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. 'பாண்டிய நாடு' படம் தான் விஷாலின் கடைசி சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அதனால், இந்தப் படத்தை எப்படியும் பெரிய ஹிட் ஆக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்து வருகிறார்களாம்.
விஷாலின் ஆஸ்தான இசையமைப்பாளராக ஆகி விட்ட ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் 'சிங்கிள்' பாடல் ஒன்றை அடுத்த வாரம் 29ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.