சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
வேகத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்கள் ரஜினி ரசிகர்கள். இன்றைய அஜித், விஜய் ரசிகர்களுக்கு எல்லாம் முன்னோடிகள் அவர்கள்தான். ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்தவர்கள் முதல் மூன்று வாரங்களுக்கு தப்பித்தவறி கூட தியேட்டர் பக்கம் வர முடியாது. ரஜினியைப் பற்றி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் தவறாக பேசுவதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்பேற்பட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் 'அட்ரா மச்சான் விசிலு' படத்தில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் செமத்தியாய் நக்கல் அடித்திருக்கிறார்கள். 'அட்ரா மச்சான் விசிலு' படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன்தான் ரஜினி. அவரது ரசிகராக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வைக்கப்பட்ட ஓப்பனிங் சீன் தொடங்கி, அவர் பேசும் பல பன்ச் வசனங்கள், என ரஜினியை அநியாயத்துக்கு வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். இப்படி வெளிப்படையாக ரஜினியை தாக்கி 'அட்ரா மச்சான் விசிலு' படத்தை எடுத்திருக்கிறார்கள்.
காரணம்...இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் ரஜினிக்கும் உள்ள பழைய பஞ்சாயத்துதான். அதாவது லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்டதாக சவுண்ட் விட்ட சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர்தான் இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர். லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விஷயத்தையே காட்சிகளாக்கி, ரஜினியை தாக்கி இருக்கிறார்கள். கடைசியில் ரஜினிக்கே புத்தி சொல்லி இருப்பதுதான் ஹைலைட்..