ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் இளம் ரசிகர்கள் அனைவரின் ஆதரவுடன் குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் சந்தானம். அவர் இல்லாத படங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார். அவருடைய கால்ஷீட்டிற்காக முன்னணி நடிகர்கள் கூட காத்திருந்தார்கள். அவ்வளவு ஏன், அவரை வைத்தே ஹீரோவாக உயர்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள்.
அதுதான் சந்தானத்தையும் அதிகம் யோசிக்க வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை வைத்து ஹீரோவாகும் போது நாமே ஏன் ஹீரோவாகக் கூடாது என்ற நினைப்பில் 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். அடுத்து 'இனிமே இப்படித்தான்' படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனாலும், இரண்டு படங்களும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.
இருந்தாலும் தன்னுடைய ஹீரோ முயற்சியை விடாமல், 'தில்லுக்கு துட்டு' படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் 7ம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை சந்தானம் இன்று நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் இருப்பதற்குக் காரணமாக இருந்த 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் இயக்குனரான ராம்பாலா இயக்கியுள்ளார்.
'தில்லுக்கு துட்டு' படமும் ஏறக்குறைய 'லொள்ளு சபா' மாதிரியாகத்தான் இருக்கும். படத்தில் பேய்களையே கிண்டலடிக்கும் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ராம்பாலா படம் பற்றி கூறுகையில், “இந்தப் படம் வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும். சந்தானத்திற்கு இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனையைக் கொடுத்து, அவரை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்,” என்கிறார்.