நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
காக்கா முட்டை படத்தை இயக்கியவர் மணிகண்டன். அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனால் அந்த காலகட்டத்தில் விதார்த் நடிப்பில் குற்றமே தண்டனையும் என்றொரு படத்தை இயக்கினார் மணிகண்டன். அந்த படத்திலும் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு விஜய சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார் மணிகண்டன்.
இந்த நிலையில், குற்றமே தண்டனையும் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அதுபற்றி விசாரித்தால், காக்கா முட்டை படத்தைப்போலவே இந்த படமும் வித்தியாசமான கதையில் உருவாகியிருப்பதால் சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். உலக அளவில் படத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து திரைக்கு வந்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்பதால் இந்த முறையை கையாள்கிறாராம் மணிகண்டன். ஏற்கனவே பெங்களூர் திரைப்பட விழா உள்ளிட்ட சில விழாக்களில் திரையிடப்பட்ட குற்றமே தண்டனையும் படம் இன்னும் சில விழாக்களிலும் திரையிடப்பட உள்ளதாம்.