'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக 'காஷ்மோரா' படத்தை தயாரித்து வருகின்றனர். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடமொன்றில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் க்ரீன்மேட் பின்னணியிலேயே படமாக்கப்பட்டுள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதால் இப்படி படமாக்கப்பட்டுள்ளது. 'காஷ்மோரா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.