இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து சிம்பு நாயகனாக நடிக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில வருட இடைவெளிக்குப் பிறகு சிம்புவும், யுவனும் மீண்டும் இந்தப் படம் மூலம் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெறுவதாக படத்தின் இயக்குனர் ஆதிக் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் டிரென்ட்செட் செய்யப் போகும் புதிய ஆல்பமாக இந்தப் படம் இருக்கும், குறிப்பாக பின்னணி இசை, என ஆதிக் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியில் இணையும் போது அனைவரும் சொல்லும் வழக்கமான வார்த்தைகள்தான் இவை. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கதையை நம்பாமல் சதையை மட்டுமே நம்பி படம் எடுத்த இயக்குனர் ஆதிக், இந்தப் புதிய படத்தில் கூட கதையை விட மற்ற விஷயங்களை அதிகம் வைக்க உள்ளார் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். படத்தின் தலைப்பிலேயே இத்தனை ஏக்களை வைத்து படத்தில் வைக்கவில்லை என்றால் எப்படி?, என யோசித்திருப்பார்களோ.