'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
நாசர் மகன் லுத்புதீன் ஹீரோவாக நடிக்கும் படம் 'பறந்து செல்ல வா', ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூர் பார்லிமென்ட் உறுப்பினர் விக்ரம் நாயர் டிரைலரை வெளியிட்டு பேசினார். பாடல்களை மற்றுமொரு பார்லிமென்ட் உறுப்பினர் கணேஷ் ராஜாராம் வெளியிட இயக்குனர் பா.ரஞ்சித் பெற்றுக் கொண்டார்.
சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிங்கப்பூர் எம்பிக்கள் பேசும்போது “சிங்கப்பூர் மற்றும் தமிழக கலைஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இது தொடரவேண்டும். சிங்கப்பூரின் அழகான பகுதிகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள் என்றனர். படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். இசை அமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் நன்றி கூறினார்.