ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இன்றைய சூழ்நிலையில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. வாட்ஸ்அப்பில் பல நல்லது நடக்கிற மாதிரி சில கெட்டதுகளும் நடக்கிறது. இதனை மையமாக வைத்து உருவாகிறது பகிரி. வாட்ஸ்அப் என்பதன் நேரடி தமிழ் வார்த்தை பகிரியாம். பிரபு ரணவீரன் என்ற புதுமுகத்துடன் ஆந்திரத்து வரவு ஷர்வியா நடிக்கிறார். இவர்கள் தவிர ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி.கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன், உள்பட 10 இயக்குனர்கள் நடிக்கிறார்கள். வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், கருணாஸ் இசை அமைக்கிறார், இசக்கி சரவணன் இயக்குகிறார்.
படத்தை பற்றி அவர்கூறியதாவது: இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. பகிர்தல் தொடர்புடைய கதை எனவேதான் பகிரி எனப்பெயர் வைத்தோம். தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை இது. இப்போதைய சமூகச்சூழலில் இக்கால இளைஞர்கள் தங்களின் காதல் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், விருப்பம், வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறேன். நான் பகிரவேண்டிய செய்தியையும் சிரிக்கச் சிரிக்க பகிர்ந்திருக்கிறேன். என்கிறார்.