தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் பாலாஜி. அதன்பின்னர் பட்டாளம் படத்தில் பள்ளி மாணவனாக நடித்தவர், காதல் சொல்ல வந்தேன் படத்தில் தனி ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் தன்னை விட மூத்தவரான மேக்னா ராஜ்ஜை காதலிப்பவராக நடித்திருந்தார். பூபதி பாண்டியன் இயக்கிய இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, ஆனால் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பாலாஜிக்கு அதன்பின்னர் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. தற்போது நகர்வலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலாஜி இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். அவர் ப்ரீத்தி என்ற பெண்ணை இன்று(ஜூன் 9-ம் தேதி) திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
தன்னுடைய திருமணம் குறித்த பதிவை போட்டோவுடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பாலாஜி.