பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெப்பம் படத்தில் தமிழுக்கு வந்த தெலுங்கு நடிகை பிந்துமாதவி கழுகு படத்தில் பிரபலமானார். அதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிந்துமாதவியின் மார்க்கெட் திடீரென்று டல்லடித்து விட்டது. அதனால் பசங்க-2 உள்பட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவர், தற்போது சிபிராஜ் நடித்துள்ள ஜாக்சன்துரை படத்தில் நாயகியாக நடித்தள்ளார். இதன்பிறகு அவருக்கு புதிதாக படங்களில்லை.
மேலும், நாய்கள் ஜாக்கிரதை ஹிட்டுக்குப்பிறகு சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிந்துமாதவிக்கும் வெயிட்டான வேடமாம். அதனால் ஜூன் 17-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர். அதோடு, அவர் சான்ஸ் கேட்ட சில டைரக்டர்களும் ஜாக்சன்துரை படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் பிந்துமாதவிக்கு புதிய படவாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார்களாம். அதனால் இந்த படம் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருக்கிறாராம் பிந்துமாதவி.