பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பீட்சா, ஜிகர்தண்டா படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறைவி. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்புராஜ், அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா திவாரியா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்மையை போற்றும் விதமாக இறைவி படம் உருவாகி உள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் சிவி குமார் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. பிச்சைக்காரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
இதுகுறித்து கே.ஆர்.பிலிம்ஸின் சரவணன் நம்மிடம் கூறியதாவது... ''நாங்கள் வெளியிட்ட முதல்படமான ''பிச்சைக்கான்'' படமே எங்களை செல்வந்தராக்கியது. எங்களுடைய அடுத்த வெளியீடாக இறைவி, வருகிற ஜூன் 3ம் தேதி ரிலீஸாகிறது. இதற்கு அடுத்தப்படியாக காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள குற்றமே தண்டனை படம் வெளியாக உள்ளது. நல்ல கதையம்சம் உடைய படங்களை எங்கள் நிறுவனத்தின் மூலமாக வெளியிடுவது மகிழ்ச்சி. காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே செல்லும் போது அவர்களுக்கு திருப்தியாக இருக்க வேண்டும், அதை தான் நாங்கள் விரும்புகிறோம். தொடர்ந்து நல்ல நல்ல படங்களை எங்களது பேனரில் வெளியிடுவோம்.
இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.