‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிளஸ் 2 படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சுஜா. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் வாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கினார். அவ்வப்போது ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தாலும் ஒரு பாட்டுக்குதான் அதிகமாக ஆடினார். தமிழ், கன்னடம், மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் ஒரு பாட்டுக்கு ஆடியவர். இனி ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை. இனி நடித்தால் ஹீரோயின்தான் என்று அறிவித்தார்.
ஒரு வருடம் இடைவெளிவிட்டு உடம்மை ஸ்லிம்மாக்கி பெயரையும் சுஜா வாருணி என்று மாற்றிக்கொண்டு புத்தம் புது நடிகையாக வந்தார். ஆனாலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ரூட்டை மாற்றிய சுஜா நல்ல கதைகளாக தேர்வு செய்து குணசித்தர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் வெளியான 'பென்சில்' படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார். அது அவருக்கு நல்ல ரீ எண்ட்ரியை கொடுத்துள்ளது.