ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையை சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ். இவரது தந்தை நோயல் ஜேம்ஸ் ஏ.ஆர்.ரகுமானிடம் மேலாளராக பணியாற்றி வருகிறார். பள்ளியில்படிக்கும்போது கீபோர்ட் மற்றும் கிடார் இசைக்க கற்றுக் கொண்டார். அனிருத்துடன் இணைந்து கச்சேரியும் செய்திருக்கிறார். அதன் பிறகு அனிருத், சந்தோஷ் நாராணயன், தமன் குழுவில் கீபோர்ட் வாசித்தார்.
ராகவா லாரன்ஸ் மூலம் 'காஞ்சனா 2' படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசை அமைத்தார். அந்த பாடல்கள் ஹிட்டாகவே 'கோ 2' படத்தில் முழுமையான இசை அமைப்பாளாராக அறிமுகமானார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பரவலாக பேசப்பட லியோன் ஜேம்ஸ் தற்போது பிசியான இசை அமைப்பாளராகிவிட்டார். வீரா, கவலை வேண்டாம் என்ற இரு படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இசை அமைப்பாளராகிவிட்டாலும் தனது 'லைவ் ஸ்ட்ரிங்' இசைக்குழுவையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.