Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இது நம்ம ஆளு: ஒரு பார்வை

23 மே, 2016 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Small-review-of-Idhu-Namma-Aalu

கடந்த 3 வருடங்களாக இதோ வருகிறது, அதோ வருகிறது என்று தள்ளிப்போய்கொண்டே இருந்த சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' வருகிற 27ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது (கடைசி நேரத்தில் தள்ளிப்போகவும் வாய்ப்புண்டு). இது நம்ம ஆளு படம் பற்றிய ஒரு பார்வை...


  • ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா எல்லோருமே ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறவர்களாக நடித்திருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கும் முதல் நகரத்து காதல் கதை.


  • சிம்புவுக்கு நயன்தாரா இன்னாள் காதலியாக நடித்திருக்கிறார். அவரது முன்னாள் காதலியாக வருகிறார் ஆண்ட்ரியா. இதுதவிர இன்னொரு காதலும் இருக்கிறது. அதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.


  • சிம்புவும், நயன்தாராவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். அந்த காதல் காட்சிகள் புதிதாக இருக்கும். அவர்களின் நிஜ காதலை நினைவுபடுத்துவதாக இருக்கும். சிம்புவின் பழைய காதல் பற்றி தெரிய வந்ததும் நயன்தாராவுக்கும், சிம்புவிற்கும் சண்டை வந்து பிரிந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதையின் ஒன் லைன்.


  • வழக்கமாக சந்தானத்துடன் காமெடி செய்யும் சிம்பு இந்தப் படத்தில் சூரியுடன் காமெடி செய்கிறார். சூரி, சிம்புவை செமயாக கலாய்ப்பதுதான் காமெடியில் ஹைலைட். ஒரு சின்ன சாம்பிள். ஒருவர் சிம்புவை காட்டி அவருக்கு பெண்களை பிடிக்குமா? என்று கேட்பார். அதற்கு சூரி பொண்ணுன்னு பேப்பர் எழுதி காட்டினாலே அவனுக்கு பிடிக்கும் என்பார்.


  • ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்ணாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நயன்தாரா சேலை, சுடிதார் மட்டுமே அணிந்து நடித்துள்ளார். இதற்கு நேர்மாறாக ஆண்டரியா மார்டன் உடைகளில் கலக்குவார்.


  • படத்தின் பெரும்பாலான காட்சி காப்பி ஷாப்புகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. காதல் வருவது, முறிவது, இணைவது எல்லாமே காப்பி ஷாப்பில்தான். சென்னையில் உள்ள 20 காப்பி ஷாப்புகளில் படப்பிடிப்பு நடத்துப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in