இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'கபாலி' டீசர் மூலம் இன்று யு டியூப் வீடியோ வலை தளத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், டிவிட்டரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய கணக்கு ஆரம்பித்த போது ஒரு கலக்கு கலக்கினார். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2014ம் ஆண்டு மே 5ம் தேதிதான் ரஜினிகாந்த் டிவிட்டரில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற பெயரில் கணக்கை ஆரம்பித்தார்.
டிவிட்டர் கணக்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே 9000 பேர் ரஜினிகாந்தைத் தொடர்ந்ததோடு அந்த கணக்கையும் டிவிட்டர் அதற்குள் உறுதி செய்து கொடுத்தது. 24 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரஜினிகாந்தைத் தொடர்ந்தனர். இதுவரை ரஜினிகாந்தை டிவிட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 29,70,000ஐக் கடந்துள்ளது. 3 மில்லியனைத் தொட இன்னும் 30000 ஃபாலோயர்கள்தான் அவருக்குத் தேவைப்படுகிறது.
இத்தனைக்கும் டிவிட்டரில் கடந்த இரண்டு வருடங்களில் ரஜினிகாந்த் 26 முறை மட்டுமே டிவீட் செய்துள்ளார். இவ்வளவு குறைவான டிவீட்டுகளில் ஒருவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தொடப் போவது ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே நடப்பதாக இருக்கும்.
ரஜினிகாந்த்தின் கடைசி டிவீட் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 'கபாலி' டீசரைக் கூட ரஜினிகாந்த் டிவீட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.