ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜய் ஆன்டனி. அதன் பின்னர் நான் படத்தின் மூலம் ஹீராவாகவும் வளர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்துள்ள பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி சமூக வலைதளத்தில் சத்தமில்லாமல் தனக்கென உள்ள ரசிகர்கள் பட்டாளத்தை இவர் விரிவுபடுத்தி வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் இவர் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. இருந்தும், டுவிட்டரில் இவர் யாரையும் பின் தொடர்வதில்லை. குறிப்பாக பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆன்டனிக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.