தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க கட்டடத்தை கட்டியே தீர வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். முதற்கட்டமாக நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ.13 கோடி வசூலானது. இதில் சங்க கடன், சங்க தேவைக்கான பணம் போக மீதம் ரூ.8 கோடி கையிருப்பு வைத்திருக்கிறார்கள். அடுத்தக்கட்டமாக நடிகர் சங்க கட்டடத்திற்கு தேவையான பணத்தை, நன்கொடை மூலமாகவும், நடிகர்கள் ஒன்று சேர்ந்து படம் நடித்து கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதியபடமான சபாஷ் நாயுடு படத்தின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. இந்தப்படத்தின் பூஜையின் போது, நடிகர் சங்க கட்டடத்திற்கு, லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. இதை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் லைக்கா சுபாஸ்கரன் வழங்கினார்.
மேலும் நடிகர் சங்க வளாகத்தில் தன்னுடைய பட பூஜையை நடத்தியதற்காக ரூ.2.5 லட்சம் வாடகையை கமல், நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.