ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா, தன்னை அதிமுக., கட்சியில் இணைத்து கொண்டார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. தொடர்ந்து இங்கிலீஷ்காரன், ஏய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதோடு தமிழ் ரசிகர்களை அன்போடு மச்சான்ஸ் என்று அழைத்து குஷிப்படுத்தினார். சமீபகாலமாக புதுமுக நடிகைகளின் வரவால் நமீதா ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவரின் குண்டான உடல்தோற்றமும் நமீதாவுக்கு படவாய்ப்பு பெற்று தர தடையாக அமைந்தது.
நமீதா, அரசியல் கட்சியில் சேர்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்யப்போவதாக அவ்வப்போது அறிவித்து வந்தார். இந்நிலையில் தன்னை அதிமுக., கட்சியில் இணைய முடிவெடுத்து தமிழக முதல்வரும், அதிமுக.,வின் பொதுச்செயலாளராருமான ஜெயலலிதாவிற்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியிருந்தார் நமீதா. நமீதாவின் ஆசைக்கு ஜெயலலிதாவும் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து திருச்சி பொதுக்கூட்டத்தில் நமீதா அதிமுக.,வில் இணைவார் என்று தகவல் வௌியானது. அந்த செய்தியும் உண்மையாகியுள்ளது. ஆம், நமீதா அதிமுக.,வில் இணைந்துள்ளார்.
திருச்சியில், பொன்மலை ஜி கார்னரில் அதிமுக.,வின் தேர்தல் பிரசாரக்கூட்டம் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக., வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் முடிவின் போது யாரும் எதிர்பாராதவிதமாக நடிகை நமீதா மேடையில் தோன்றினார். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுக.,வில் முறைப்படி இணைத்து கொண்டார் நமீதா. ஜெயலலிதா அவருக்கு மேடையிலேயே அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
நமீதாவுடன் திரைப்பட இயக்குனர் சக்தி என். சிதம்பரம், திரைப்பட நடிகர் அனுமோகன் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.
நமீதா அதிமுக.வில் இணைந்த கையோடு இனி அக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதிமுக.,வில் இனி நமீதா அலை எங்கும் வீசப்போகிறது.