ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழரான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்து இயக்கி உள்ள லென்ஸ் இந்தியாவில் பல விருதுகளை பெற்று வருகிறது. சமீபத்தில் கொல்லுபுடி ஸ்ரீனிவாஸ் விருதை பெற்றது. தமிழ், ஆங்கிலத்தில் தயாரகி உள்ள இந்தப் படம் புனே, சென்னை, பெங்களூரு, டில்லி பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும், பரிசுகளையும் வென்றது. தற்போது வருகிற 28ந் தேதி முதல் மே 8ந் தேதி வரை நடக்கும் பார்சிலோனா திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குன் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: லென்ஸ் படம் இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. அதுவும் போட்டிப் பிரிவுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது எங்களுக்கு புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. சினிமாவுக்கு குறிப்பிட்ட மொழி கிடையாது என்பதை நம்பி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். படத்துக்கு அபாரமான பாராட்டுக்களும் சாதக விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் இந்தியாவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. பொது மக்களின் பார்வையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்,. என்றார்.