தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்தாய் படத்தில் அறிமுகமான விக்னேஷ், அதையடுத்து பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே, பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த ஈசா, கெளரவர்கள், புவனக்காடு போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் அவரை வைத்து அடுத்தபடியாக படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அதனால் அவன் அவள் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார் விக்னேஷ். பைனான்ஸ் பிரச்னை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த அப்படத்தை சில மாதங்களுக்கு முன்பே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தேதியை மாற்றிக்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 'அவன் அவள்' படத்தை வெளியிட தற்போது முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகமெங்கிலும் அப்படம் சுமார் 120 தியேட்டர்களில் வெளியாகிறதாம். ரமேஷ் மிர்னாலி இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையில் உருவாகியிருக்கும் அவன் அவள் படத்தில், காரில் மலை உச்சிக்கு செல்லும் விக்னேஷ், அங்கிருந்து குதிக்கும் ஒரு காட்சி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.