மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
பிரபுசாலமனின் மைனாவுக்கு பிறகு விதார்த் நாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால், ஜன்னல் ஓரம் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்தவர், வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்தார். தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கியுள்ள 'குற்றமே தண்டனை' என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார் விதார்த். என்ன காரணமோ அந்த படம் திரைக்கு வருவதில் தாமதமாக்கிகொண்டு வருகிறது.
மேலும் தற்போது வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட புதுமையான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் விதார்த், கதைகளுக்காக என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று டைரக்டர்களிடம் கூறி வருகிறார். இந்த நிலையில், தற்போது ஒரு கிடாயின் கருணை மனு -என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் விதார்த். மனிதர்களுக்கு தான் உணவாக்கப்படுவது குறித்து ஒரு கிடா வருந்துவது போன்று உணர்வுப் பூர்வமான கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறதாம்.