தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த உஷா கிருஷ்ணன், 'ராஜா மந்திரி' படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். கலையரசன், ஷாலின், காளி வெங்கட் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார் ஐஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் அண்ணன், தம்பி பாசக்கதை. அண்ணனாக காளி வெங்கட்டும், தம்பியாக கலையரசனும் நடிக்கிறார்கள். இயக்குனர் உஷா கிருஷ்ணன் சுசீந்திரனிடம் பணியாற்றியதால் அவர் படங்களில் நடித்த ஹீரோக்கள் உள்ளிட்ட பல ஹீரோக்களை அவருக்குத் தெரியும். ராஜா மந்திரி கதையை அவர்களிடம் கூறி நடிக்க கேட்டபோது கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் பிசியாக இருக்கிறேன். என்ற தட்டிக் கழித்தார்களாம். சிலர் வேறு இயக்குனர் இயக்குவதாக இருந்தால் நடிக்கிறேன் என்றார்களாம்.
“நான் பெண் இயக்குனர் என்பதால் அவர்கள் நடிக்க தயங்கியிருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. கலையரசனும், காளி வெங்கட்டும் படத்தில் அண்ணன் தம்பியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ஒவ்வொரு அண்ணன் தம்பிக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள் அதுபோதும்” என்கிறார் உஷா கிருஷ்ணன்.