தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மூன்று முகம் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்தார் ரஜினி. அதில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு, அதற்கு பிறகு போலீஸ் வேடங்களில் நடித்த பல இளவட்ட நடிகர்களுக்கு அது ரோல் மாடலாகவும் இருந்து வருகிறது. ஆனபோதும் ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் நடிப்பை மிஞ்சும் வகையில் இப்போதுவரை எந்த நடிகர்களும் நடிக்கவில்லை. அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.
இந்த நிலையில், தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் போலீசாக நடித்து வரும் ராகவா லாரன்சும், ரஜினி நடித்த அலெக்ஸ் பாண்டியன் கேரக்டரை மனதில் கொண்டு நடித்திருக்கிறாராம். போலீஸ் வேடம் என்றதும் அவருக்கு பிடித்தமான ரஜினியின் அந்த கதாபாத்திரம்தான் மனதில் வந்து நின்றதாம். ரஜினி அளவுக்கு தன்னால் நடிக்க முடியாது என்றாலும், அதை பின்பற்றி நடிக்க முயற்சி எடுத்துள்ளாராம் லாரன்ஸ். மேலும், ஆக்சன் படமென்றாலும் படங்களின் வெற்றிக்கு காமெடி அதிமுக்கியமானதாகி விட்டது என்பதால் தனது முந்தைய படங்களைப்போலவே இந்த படத்திலும், கோவை சரளா, தேவதர்ஷினி, மயில்சாமி, கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என பல காமெடியன்களுடன் இணைந்து தானும் காமெடி கோதாவில் இறங்கியிருக்கிறார் லாரன்ஸ்.