வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை வைத்து இந்தியில் நில் பேட்டே சனாட்டா என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அண்மையில் சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் நில் பேட்டா சனாட்டா படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
அது மட்டுமல்ல பாலிவுட் திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது.
நில் பேட்டே சனாட்டா படத்தைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் தனுஷ், அஸ்வினி ஐயர் இயக்கத்திலேயே அப்படத்தை தமிழில் தயாரிக்க முன்வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. அந்தப் படத்துக்கு அம்மா கணக்கு என்று பெயரிடப்பட்டது. அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட அம்மா கணக்கு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி கடைசி வாரம் முடிவடைந்தது. அதன் பிறகு இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
நில் பேட்டே சனாட்டா படம் இந்தியா முழுக்க ஏப்ரல் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் நில் பேட்டே சனாட்டா படத்தின் தமிழ் ரீமேக்கான அம்மா கணக்கு படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தனுஷ் தயாரிப்பில் வெளியாகி காசை அள்ளிய காக்கா முட்டை படத்தைப் போல் அம்மா கணக்கு படமும் பணத்தை அள்ளும் என்று கணக்குப்போட்டிருக்கிறாராம் தனுஷ்.
அம்மா கணக்கு பற்றி தனுஷின் கணக்கு வொர்க்அவுட்டாகுமா?