மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'அம்மா கணக்கு' படத்தின் முதல் பார்வை நாளை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஹிந்தியில் 'நில் பட்டே சன்னாட்டா' என்ற பெயரில் தயாராகி முடிந்து வெளியாவதற்குத் தயார் நிலையில் உள்ளது. அதற்குள் அந்தப் படத்தைப் பார்த்த தனுஷ், அதை தமிழில் ரீமேக் செய்ய விருப்பப்பட்டார்.
தனுஷ் நடித்த 'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த்.எல் ராய் தான் ஹிந்திப் படத்தை வெளியிட உள்ளார். அவர் சிபாரிசு செய்ததால் உடனடியாக தமிழ்ப் படத்தையும் தயாரித்து மிகக் குறுகிய நாட்களில் தயாரித்து முடித்துவிட்டார் தனுஷ். இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் இந்தப் படத்திற்குத் தனி பலம் சேர்க்கும் என அவரைச் சந்தித்து தனுஷும் சம்மதிக்க வைத்தார்.
அம்மா, மகளுக்கிடையிலான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான முதல் பார்வை நாளை வெளியாக உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.