வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
நாடோடிகள், ஈசன், ஏழாம் அறிவு, வீரம் உள்பட பல படங்களில் நடித்தவர் அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர், தற்போது அடிடா மேளம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். வாய்பேச முடியாத, காதுகேட்காத பெண்ணாக இருந்தபோதும் உதட்டு அசைவுகளை வைத்தே யார் என்ன பேசுகிறார் என்று அறிந்து கொள்வதோடு மட்டுமல்லால் அதே உதட்டு அசைவுகளால் அழகாக பேசுவது போன்று நடிக்கக் கூடியவர் அபிநயா என்பதால், அவருக்கு தொடர்ந்து இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். கின்னஸ் சாதனை இயக்குனர் ரூபம் சர்மா என்பவர் 56 மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து இயக்கும் 'தி லிட்டில் பிங்கர்' என்ற படத்தில் அபிநயாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம். மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் ஊனமாக இருந்தபோதும் மனதளவில் திறமைசாலிகள். அவர்களிடம் சாதனை செய்யக்கூடிய பல வியத்தகு திறமைகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதே இந்த படத்தின் கதையாம்.